தெற்கு அதிவேக வீதியில் கடந்த இரண்டு நாட்களாக காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
பின்னதுவ மற்றும் வெலிபென்ன இடைமாறும் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக, தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள பொலிஸார், வாகன ஓட்டிகள் அதிவேகமாக பயணிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.