கிளிநொச்சியில் ரயில் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (18-01-2024) பிற்பகல் 4.30 மணியளவில் அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் குறித்த சடலம் புகையிரத நிலைய அதிகாரிகளால் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.