பொதுவாகவே நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் ஒன்று தான் கறிவேப்பிலை. இது எல்லா வகை சமையலிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருளாகும்.
ஆனால் கறிவேப்பிலை பற்றி நம்மில் பலரும் அறியாத விசித்திரமான விடயம் ஒன்று இருக்கிறது. கறிவேப்பிலையை கைகளில் கொடுக்க கூடாது என நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருப்பது ஏன் தெரியுமா?
இது சாஸ்திரம் என நினைத்தே பலரும் பின்பற்றுகின்றார்கள், ஆனால் அதன் பின்னால் காணப்படும் அறிவியல் உண்மையை இந்த பதிவில் பார்க்கலாம்.
நமது முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் சொல்லிவைக்கவில்லை, அவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டின் பின்னாலும் துள்ளியமான அறிவியல் உண்மை மறைந்துள்ளது.
கறிவேப்பிலையை மற்றவர் கைகளில் கொடுக்கக்கூடாது என கூறியமைக்கு காரணம் கறிவேப்பிலைக்கு எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகம். எனவே கறிவேப்பிலையில் எதிர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படுகின்றது.
இதனை நாம் மற்றர்களின் கைகளில் நேரடியாக கொடுக்கும் போது அவர்களுக்கு எதிர்மறை ஆற்றல் கடத்தப்படுகின்றது.
உதாரணமாக நம் அயலவர் கைகளில் கறிவேப்பிலையை கொடுத்தால் அவர்களுக்கும் நமக்கும் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு அதிகம், அதற்கு காரணம் எதிர்மறை சக்திகள் கடத்தப்படுவதுதான்
அதனால் தான் முன்னோர்கள் வீட்டு முற்றத்தில் கறிவேப்பிலை செடியை வளர்ப்பதில்லை.குழம்பில் கறிவேப்பிலையை சேர்ப்பதற்கும் இதுவே காரணம், குழம்பில் ஏதாவது சிறிய அளவில் காணப்படும் நச்சித் தன்மையை கூட இந்த கறிவேப்பிலை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையுடையது.
கறிவேப்பிலையில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கின்றது என்பது அறிவியல் உண்மை, அதனாலேயே நல்ல உறவை பேண நினைப்பவர்களின் கைகளில் கறிவேப்பிலையை கொடுக்கக்கூடாது என கூறியிருக்கின்றார்கள்.