வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்த ஒருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
சினமன் கிராண்ட் ஹோட்டலின் உணவகப் பிரிவின் முகாமையாளர் என்று கூறப்படும் ஸ்டீவர்ட் பெரேரா என்பவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கலாநிதி நாமல் பண்டார பலாலே நேற்று வழங்கியுள்ளார்.
பிரதிவாதி குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட நபருக்கான பணத்தை மீளவும் வழங்க நீதிமன்றில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.