நாட்டில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சிறிய குளங்கள் நிரம்பி வழிவதால் யால பகுதியில் பலதுபன பிரதான நுழைவாயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுடன் இரண்டு வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
இந்நிலையில், யால தேசிய பூங்காவிற்கு செல்வதற்கான பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
எனினும், கடகமுவ நுழைவாயிலில் இருந்து சுற்றுலா பயணிகள் யால பூங்காவிற்குள் பிரவேசிக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.