யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் மானிப்பாய் – கல்லூண்டாய் வீதியில் நேற்று(05-01-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கப் ரக வாகனம், கல்லூண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமியும் ஆணொருவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.