கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய்களுக்கு உட்படுவதாக சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, இது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தட்டம்மை தடுப்பூசி போடும் தகுதி இல்லாத 9 மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தட்டம்மை நோயாளர்களில் 33 சதவீதமானவர்கள், மூடநம்பிக்கைகள் காரணமாக தட்டம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர் என தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே சுட்டிகாட்டியுள்ளார்.