லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.