2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கான வாக்காளர் பதிவு நேற்று (01.01.2024) ஆரம்பமாகியுள்ளது.
தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
முன்னதாக, 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு எதிர்வரும் (01.02.2024) ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதால், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாக தேர்தல்கள் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விரைவில் காட்சிப்படுத்தப்படும்.

