மட்டக்களப்பு மக்களால் கணேஸ் என பெயர் சூட்டப்பட்ட கொம்பன் யானை உயிருக்கு போராடிய நிலையில் உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு – கிண்ணையடி முருக்கன்தீவில் வசித்துவந்த குறித்த யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்த யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேசவாசிகள் பலமுறை கூறிவந்துள்ளனர்.
எனினும், உரிய நேரத்துக்கு வருகை தராத காரணத்தால் யானை உயிரிழந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.