பொதுவாக ஆரம்ப காலங்களில் மொபைல் போன் ஒரு தெருவிற்கு ஒரு வீட்டில் இருப்பது என்பதே மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது.
ஆனால் தற்போது டெக்னலாஜி வளர்ச்சியால் ஒரு வீட்டில் உள்ள அனைவரிடமும் மொபைல் இல்லை என்று கூறினால் தான் ஆச்சரியம்.
ஏனென்றால் 5 வயது குழந்தை முதல் 50 வயது வரை உள்ள பெரியவர்கள் என அனைவரிடமும் மொபைல் உள்ளது.
எவ்வளவு விலையுயர்ந்த செல்போன்கள் இருந்தாலும் அதனை பாதுகாப்பதில் தான் அதன் பெறுமதி இருக்கின்றது. செல்போன்களை சார்ஜ் போடும் போது அதிக கவனம் தேவைப்படுகின்றது.
அதில் ஏதாவது குளறுப்படிகள் வரும் பட்சத்தில் தொலைபேசி எடுக்க முடியாமல் சென்று விடும்.
அந்த வகையில் செல்போனை சார்ஜ் போடும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டியவைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்வோம்.
1. மொபைல் சார்ஜ் ஏறும் போது திடீரென்று சத்தம் கேட்டாலோ அல்லது திடீரென்று மொபைல் சுவிட்ச் ஆப் ஆகினாலோ மொபைலை சரி செய்து கொள்ள வேண்டும். இதனை கவனிக்காமல் விட்டால் வெடித்து சிதறுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கின்றது.
2. புதிதாக மொபைல் அல்லது ஏற்கனவே வைத்து பயன்படுத்தும் மொபைல் இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் அதனுடைய பேட்டரி ஆனது வீக்கம் அடைந்து இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க வேண்டும்.
3. ஸ்மார்ட் போன்களை நீண்ட நேரம் சார்ஜ் போடுவதால் போனில் உள்ள “அயன் லித்தியம் பேட்டரி” சார்ஜ் நிலையிலிருந்து டிஸ்சார்ஜ் நிலைக்கு மாறுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. பேட்டரி பலவீனம் அடைந்து விரைவில் செயல்திறன் குறைந்து பேட்டரி வெடிக்கும் நிலை கூட வரவிருக்கும்.
4. மொபைல் சார்ஜ் செய்யும் போது வழக்கத்துக்கு மாறாக சூடாக மாறிவிடும். இப்படி ஏதாவது இருந்தால் கண்டிப்பாக பேட்டரியில் ஏதாவது பிரச்சினை இருக்கும்.