காலி – அஹுங்கல்ல புகையிரதம் முன்பாக முயற்சித்த 2 பிள்ளைகளின் தாயை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல உப முகாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
முறைசாரா உறவைப் பேணிய கணவனுக்கு கப்பம் கட்ட முடியாமல் தனது 8 மாத மகளை தூக்கிக்கொண்டு வந்த தாய் இந்த விபரீத முடிவை எடுக்க முயற்சித்துள்ளார்.
அஹுங்கல்ல வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் தவறான உறவை பேணி வந்துள்ளார்.
குறித்த பொலிஸார் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வெளிநாட்டிலுள்ள கணவனுக்கு அனுப்பப்போவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
சுமார் 4 லட்சத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (28.12.2023) மதியம் தன்னிடம் 60000 ரூபாவை கேட்டதாகவும் அதனை கொடுக்க முடியாத நிலையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் 8 மாதக் குழந்தையுடன் புகையிரதம் முன்பாக குதிக்க முயற்சித்ததாக பெண் குறிப்பிட்டுள்ளார்.
முறைசாரா உறவைப் பேணி அவருடன் அறையில் கழித்த தருணங்களை பதிவு செய்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.