பொரலஸ்கமுவில் இருந்து பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு சென்ற நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவத்திற்கு பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொரலஸ்கமுவ தெஹிவளை வீதியில் உள்ள சமூபகார மாவத்தையில் உள்ள விடுதிக்கு பெண் ஒருவருடன் சென்ற நபரே திடீரென உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், பொரலஸ்கமுவ வெரஹெர போதிராஜபுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவயந்துள்ளது.
உயிரிழந்த நபர் நேற்று முன்தினம் (25-12-2023) மதியம் குறித்த பெண்ணுடன் விடுதிக்கு வந்துள்ளார், சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த பெண் அறையிலிருந்து அலறியடித்தவாறு வெளியே வந்துள்ளார்.
பின்னர், அந்த நபர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக விடுதி முகாமையாளரிடம் தெரிவித்தார்.
முகாமையாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவரது வாயிலிருந்து சளி வெளியேறியதைக் கண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுத்து முச்சக்கரவண்டியைக் கொண்டு வந்து அந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தார்.
அப்போது அந்த பெண் அங்கிருந்த தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
குறித்த பெண்ணை கண்டுபிடிக்க விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.