வவுனியா – பாவற்குளத்திலிருந்து இளம்பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (21-12-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார்.
இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இருபினும், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.