கொழும்பு – மாளிகாவத்தை பிரதேசத்தில் கஞ்சா கலந்த மாவை உற்பத்தி செய்த வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் ஆர்.பி.வத்தை பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
அங்கு சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் 03 கிலோ 520 கிராம் கஞ்சா கலந்த மாவா, கஞ்சா கலந்த பாக்கு, மின்சார தராசு, சீலர் இயந்திரம், இரசாயன பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.