இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுமாறு இயலாமையுடைய நபர்கள், இயலாமையுடைய நபர்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இயலாமையுடைய நபர்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த டிசம்பர் மாதம் முதல் இயலாமையுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இதன்போது தெரிவித்துள்ளார்.