கல்முனை கார்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவை இலங்கை கடற்படையினர் மீண்டும் பத்திரமாக கடலுக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.
கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறா பற்றி தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS Deegayu மூலம் தகவல் கிடைத்ததும், கடற்படையினர் கடற்படை வீரர்கள் குழுவை கடற்கரைக்கு அருகில் அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் வசிப்பவர்களுடன் இணைந்து பணியாற்றிய கடற்படை வீரர்கள், சிக்கித் தவித்த திமிங்கல சுறாவை மீண்டும் ஆழமான கடலுக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.