திருகோணமலை – கிண்ணியா பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரரை ஐஸ் போதைப் பொருளுடன் நேற்றிரவு (2023.12.05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா- குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரர் 30 வயதுடையவராவார்.
கொழும்பிலிருந்து அரச பேருந்தில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பாலம் போட்டாறு பொலிஸ் சோதனை சாவடியில் குறித்த சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் 120 மில்லி கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதுடன், விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.