பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பஸ் கட்டணத்தை குறைக்க முடியாதென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளனர் .
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது
நேற்று வியாழக்கிழமை (30) நள்ளிரவு முதல் லங்கா டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேற்படி அறிவிப்பை வௌியிட்டுள்ளது.