மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றைய தினம் (29.11.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தில் விமானங்களை அசெம்பிள் செய்தல் மற்றும் பழுது நீக்கும் பணிகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தின் இழப்புகள் 1.5 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மிகக் குறைந்த இழப்பாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.