இலங்கையில் இந்திய வீடமைப்புத்திட்டத்தில் 4வது கட்டத்தின் கீழ் மலையகத்திற்கான மேலும் 10,000 வீடுகள் கட்டும் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையுடனான மக்கள் நல மேம்பாட்டு ஒத்துழைப்பின் கீழ் இந்தியா அங்கு வீடுகளை கட்டி தருகிறது.
இதன் முதல் 2 கட்டங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள், 3வது கட்டத்தில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் 4,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
இதன் 4வது கட்டமாக தேயிலை தோட்ட பகுதிகளில் மேலும் 10,000 வீடுகளை கட்டி கொடுக்கும் 2 ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
இந்த வீடுகள் தேசிய வீட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அரசு பொறியியல் கழகம் (எஸ்இசி) ஆகியவற்றின் மூலம் கட்டி கொடுக்கப்பட உள்ளது.
இந்த வீடுகள் இலங்கையின் 6 மாகாணங்களில் உள்ள 11 மாவட்டங்களில் கட்டித் தரப்பட உள்ளது.
இலங்கை அரசு தரப்பில், மேம்பாட்டு ஒத்துழைப்பு பிரிவின் கவுன்சிலரும் தலைவருமான எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் மற்றும் எஸ்இசி தலைவர் ரத்ன கலுபஹானா ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.