யாழ்ப்பாண பகுதியொன்றில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்க்குள் புகுந்து மருதங்கேணி பொலிஸார் பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திற்க்குள் புகுந்தே பொலிஸார் இன்றைய தினம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நிகழ்வை நடாத்துபவர்கள் யார், ஏன் செய்கிறீர்கள், ஏற்பாட்டாளர்களின் பெயர் விபரங்களை தாருங்கள், குறித்த மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துபவர்கள் அதனை உறுதிப்படுத்தி கடிதங்களை தாருங்கள், என்றும் கோரியதுடன் அச்சுறுத்துயும் சென்றுள்ளனர்.
மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி பொறுப்பாளரும் உடுத்துறை மாவீரர் துயிலில் இல்ல செயற்பாட்டில் ஈடுபடுபவருமான சற்குணதேவியிடம் பல மணித்தியாலம் விசாரணைகளை நடாத்தியும் சென்றுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.