பொது சுகாதார பரிசோதகர்களின் தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22.11.2023) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில், சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழில் துறையினரின் தொழில்சார் பிரச்சினைகளை ஒன்றாக தீர்ப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, பயணச் செலவு, நிர்வாகச் சிக்கல்கள், பயிற்சி, அபராதத் தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு குறுகிய கால அவகாசத்தை வழங்குமாறு கலந்துரையாடலில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் ரமேஷ் பத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.