புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கம்மன, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சானக திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாளாந்தம் மற்றும் மாதாந்தம் கடன் கொடுக்கும் தொழில் மற்றும் பல தொழில்களை நடத்தி வந்த இவரின் மனைவி சுமார் 07 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார்.
எனவே, தொழிலதிபர் தினமும் காலையில் பாடசாலை பேருந்தில் பிள்ளைகளை அழைத்துச் சென்று பாடசாலை முடிந்ததும் பிள்ளைகளை அழைத்து வர ஏற்பாடு செய்வதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதற்கமைய, நேற்று பிள்ளைகளை ஏற்றிச் செல்ல பேருந்து அருகில் வராததால் பிள்ளைககள் நடந்தே வீட்டிற்கு வந்தனர், வீடு திறந்திருந்ததால் தந்தையை தேடிய போது மூத்த பிள்ளை தந்தை தூக்கில் தொங்கியதை அவதானித்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.