2024ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் மீதான குழு நிலை விவாதம் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் ஞாயிற்றுகிழமைகள் தவிர, 19 நாட்கள் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இதனை இடுத்து பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 13 ஆம் திகதி மாலை 6 மணியளவில் நடத்தப்படவுள்ளதாக நாடாயளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.