வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலையில் இன்று இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான 6 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டியிருந்த மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த பொதுமக்களால் பாடசாலை அதிபரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.