ஹொரணை, கோனபொல, எட்டம்பஹேன பிரதேசத்தில் தனது காதலியை அழைத்து வருவதற்காக அவரது சகோதரனின் ஏழு வயது மகளை இளைஞர் ஒருவரால் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த இளைஞன் சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை காதலிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வரவில்லை என்றால் சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
பின்னர், தனது காதலியின் உறவினர் வீட்டிற்கு சென்று சிறுமியை ஒப்படைத்து விட்டு குறித்த இளைஞர் காதலியுடன் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து, கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன பொலிஸார், நேற்று முன்தினம் (14-11-2023) கோனாபினுவல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரின் காதலன் மற்றும் கடத்தலுக்கு உதவிய அவரது மைத்துனரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யபட்டவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, கோனாபினுவல பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் காதலனின் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடத்தலுக்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் பொறுப்பேற்றதுடன், அது வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.