யாழிற்கு விஜயம் செய்த இலங்கைக்காக சீனத் தூதுவரை தனியார் விடுதியில் நேற்றைய தினம் (06-11-2023) சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பில், சீன தூதுவர் இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இதையடுத்து சந்திப்பில் கலந்துகொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சீனத் தூதருக்கு எடுத்து கூறினர்.
இலங்கைக்கு அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்குப் பதிலளித்த சீனத் தூதுவர், வெளிநாட்டின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என 2 மணித்தியாலங்கள் தூதுவருக்கு புத்திஜீவிகள் எடுத்துரைத்துள்ளனர்.
குறித்த சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சார்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.