அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி கொழும்பில் உள்ள பாடசாலை மாணவர்களின் உடல் பருமன் 8 வீதமாக அதிகரித்துள்ளது.
மாணவர்களின் உடல் பருமன் வளர்ச்சி அவர்களின் எதிர்காலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளனர்.
புரோட்டீன் நிறைந்த உணவுகளை வாங்குவதில் உள்ள சிரமத்தால், குழந்தைகள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக வருங்கால சந்ததியினருக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
முடிந்தவரை மாவு உணவுகளை குறைத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் உடல் பருமனை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.