யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
குறித்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில் காங்கேசன்துறை வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த வாரமும் இணுவில் பகுதியில் இவ்வாறான ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பெறுமதியான மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், திருடப்படும் மோட் டார் சைக்கிள்களை பயன்படுத்தி வழிப்பறிகளும் கொள்ளைகளும் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.