கடலுக்கடியில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷி யான் 6 கப்பலுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்காக வெளிவிவகார அமைச்சின் அனுமதிக்காக காத்திருக்கும் நாரா அமைப்பு இந்திய பெருங்கடலில் நீர்நிலையை மையமாக கொண்டு வான் கடல் ஆராய்ச்சிக்கு இணங்கியுள்ளதாக நாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து காணப்படும் உணர்வுகள் காரணமாக கடலுக்கு அடியில் ஆராய்ச்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை எனவும் நாரா அமைப்பின் விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார்.
கடலில் வெப்பநிலையும் குளிர்ச்சியும் காலநிலையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை கண்டறிவதற்காகவே இவ்வாறான ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள நாரா அமைப்பின் தலைமை விஞ்ஞானி அருளானந்தன் குறிப்பிட்டுள்ளார்.