கிளிநொச்சியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து படு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி 5 வீட்டுத்திட்டம் பகுதியில் இச் சம்பவம் புதன்கிழமை (25) திகதி 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற அந் நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அந்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சற்று நேரத்தில் சத்தம் கேட்டுள்ள நிலையில் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணைக்கு சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள தோடு கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.