கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ தெரிவித்துள்ளார்.
மீண்டும் அகழ்வு பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17 உடற்கூற்றுக்கான பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கப் பெறும் என வினவப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ அவர்களை இன்று (05) தொடர்பு கொண்டு வினவிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் நிதி இல்லை என நேற்றையதினம் (04) கூறியுள்ளதாகவும் அகழ்வு பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த மாதம் செப்ரெம்பர் (06) ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.
இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் அவ் அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரமளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.