யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.’
இச் சம்பவம் நேற்றைய தினம் (03-10-2023) செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலைக்கு முன்பாக வைத்து சிலரால் ஆசிரியர் தாக்கப்பட்டமை அடுத்தே குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவர் குறைவான வருகையுடன் காணப்பட்ட நிலையில் அதுதொடர்பில் கண்டித்துள்ளதை அடுத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த மாணவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த ஆசிரியர் தாக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் தெரிவித்துள்ளனர்.