எங்கு சென்றாலும் கையைப் பிடித்துக்கொண்டே இணைந்தே காணப்பட்ட பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், தற்போது வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
ஹரியும் மேகனும் இணைந்து காணப்படும் புகைப்படங்களை கவனித்தால், அப்பாவியாக, மேகன் தன் காதல் கணவர் ஹரியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களை அதிகம் காணமுடியும். ஆனால், அந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது இப்போது.
ஹரி தனது கடந்த காலத்திலேயே அதிகம் கவனம் செலுத்துவதாகவும், ஆனால், மேகனோ புதிய பிராண்ட் ஒன்றை உருவாக்குவதை இலக்காக வைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளரான Emily Andrews என்பவர்.
சமீபத்தில் ஆப்பிரிக்கா சென்று திரும்பிய ஹரி, தனது புதிய புராஜக்ட்களில் கவனம் செலுத்தி வருகிறார், மேகன் இல்லாமல்…
மேகன், தான் ஒரு கோமகள், தனக்கு நட்சத்திர அந்தஸ்து உள்ளது என்பதை நன்கு புரிந்துகொண்டு, அதை வைத்து தனி புராஜக்ட்களில் கவனம் செலுத்திவருகிறார்.
ஆக மொத்தத்தில் திருமணமாகியும், தனித்தனி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் ஹரியும் மேகனும் என்கிறார் Emily Andrews.