தனது ரகசியத்தை அறிந்து கொண்ட தாயை பெற்ற மகளே கத்தியால் 30 முறை குத்திக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெற்ற தாயை கல்லூரியில் படிக்கும் மகளே கத்தியால் 30 முறைக்கும் மேல் குத்திக் கொன்ற சம்பவத்தில் மகள் மீதான குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடந்த விசாரணைக்கு பிறகு மகள் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிப்படுத்தியதோடு நாளை மறுநாள் குற்றம் சுமத்தப்பட்ட மகளுக்கான தண்டனை விவரத்தையும் நீதிமன்றம் வெளியிட உள்ளது.
ஓஹியோ மாகாணத்தில் மார்ச் 2020ம் ஆண்டு சிட்னி பவல் என்ற 23 வயது கல்லூரி மாணவி, சுகாதார பணியாளராக பணி புரிந்து வரும் அவரது தாய் பிரெண்டா பவலை கொடூரமாக தாக்கி கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்.
மகள் சிட்னி பவல் அவருடைய நடத்தை காரணங்களுக்காக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தெரிந்து கொண்ட தாய் பிரெண்டா பவல் கல்லூரி நிர்வாகத்திடம் முறையீட முன்வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகள் சிட்னி, தாயை இரும்பு வாணலியால் தாக்கி நிலை குலைய செய்ததோடு கத்தியால் தாயின் கழுத்தில் 30 முறைக்கும் மேல் குத்தி கொடூரமாக கொன்றுள்ளார்.
இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு 2 நாட்களில் தண்டனை விவரங்கள் வெளியிடப்பட உள்ளது.