தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினம் தமிழர் வாழும் பகுதியெங்கும் அனுஸ்டிக்கபப்ட்டு வருகின்றது.
கடந்த 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்கள் தண்ணீர் ஆகாரம் இன்றி தன்னுயிரை ஆகுதியாக்கிய இன்று ( 26) கடைசி தினமாகும்.
ஈழத்தமிழ் மக்களுக்காய் தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பல்லரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது கையில் , தியாக தீபம் திலீபனின் உருவ படத்தை கையில் பச்சை குத்தி இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்து இருந்தது.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞனின் கையிலையே பச்சை குத்தி இருந்தது.
அதேவேளை தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு தமிழர் தாயகமெங்கும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
. இன்று (26.09.2023) பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இடம்பெறவுள்ளது.