கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் 28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழு முரண்பாடு இச்சம்பவத்திற்கு வழியமைத்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.