யாழ்.பல்கலைக் கழகத்தின் நுண்கலை பீடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி பி.ப 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகள் நடாத்தப்படுகின்றன.
அந்தவகையில் குறித்த கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி பி.ப 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.