சீனா 68 இராணுவ விமானங்களையும் 10 கடற்படைக் கப்பல்களை தமது தீவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பியதாக தாய்வான் கூறியுள்ளது.
ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பல் தலைமையில் இரண்டாவது நாள் இராணுவப் பயிற்சியை சீனா மேற்கொண்டு வருகின்றது.
தாய்வானை அதன் சொந்தப் பிரதேசமாகக் கருதும் சீனா, அதனை அடைய தமது பலத்தைப் பயன்படுத்தவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளது,
அந்த விமானங்களும் போர்க்கப்பல்களில் சிலவும் மேற்கு பசிபிக் பகுதிக்கு ஷான்டாங் விமானம் தாங்கி கப்பலுடன் பயிற்சியை நடத்த செல்கின்றன என்றும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை மியாகோ வழியாக சீன கப்பல்கள் அப்பகுதியை நோக்கி செல்வதை ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் அந்தப் பகுதியில் நடத்தப்படும் இராணுவப் பயிற்சிகள் குறித்து சீனா உத்தயோகப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை