திருகோணமலையில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தோப்பூரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மதுபோதையில் நால்வர் முச்சக்கர வண்டியில் சென்ற போது முச்சக்கர வண்டி நிலை தடுமாறி வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.