அம்பலாந்தோட்டையில் தனியார் பேருந்து ஒன்று மின்மாற்றி ஒன்றுடன் மோதி முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அம்பலாந்தோட்டை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியார் பேருந்தில் ஏறிய கும்பல் ஒன்று அப் பேருந்தின் சாரதியைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாரதி பேருந்தை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தை நோக்கித் திருப்பும் போது பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.
இதன்போது பேருந்து மின்சார மின்மாற்றியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.