மட்டக்களப்பு நகரில் பொலிஸ் சீருடையுடன் பரிசோதகர் ஒருவர் இரு இடங்களில் மதுபானத்தை பெற்றுக் கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (08-09-2023) முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு நகரப் பகுதியிலுள்ள மதுபானசாலைக்கு சென்று அரை போத்தல் மதுபானத்தை பெற்றுக் கொண்டு வீதியில் நிற்கும் முச்சக்கர வண்டியில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் மதுபானத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதேவேளை, அந்த பகுதியில் இருக்கும் மற்றுமொரு மதுபானசாலைக்கு சென்று அங்கும் அரைப்போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு அதேபோன்று முச்சக்கரவண்டியில் இருந்து பணத்தை எடுத்து வருவதாக தெரிவித்து மதுபானத்துடன் தப்பியோடியுள்ள காட்சிகள் சிசிரிவியில் பதிவாகியுள்ளது.