வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய திருவிழாவில் பெண் ஒருவரின் கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை குறித்த நபர் கைதாகியுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவுக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வருகை தந்த பெண் அடியவர் ஒருவர் ஆலயத்தின் அருகிலுள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திய சமயம் பெண்ணின் கைபேசி திருட்டுப் போயுள்ளது.
இது தொடர்பில் அந்தப் பெண் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் CCTV மூலம் சந்தேகநபரை இனங்கண்ட பொலிஸார் , நேற்றைய தினமும் அந் நபர் ஆலயத்துக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.