நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு முந்நூற்று இருபத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து பதின்மூன்று விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த தேர்வை அக்டோபர் மாதம் நடத்த பரீட்சை திணைக்களம் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 2023 நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை பரீட்சை நடைபெறும் என ஜூலை 17ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பு.வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.