ஹோமாகம கட்டுவன கைத்தொழில் வலயத்திற்கு அருகில் உள்ள தெல்கஹவத்தை வயல்வெளியில் நீர் வடிந்தோடும் கால்வாயில் பல நாட்களாக வெள்ளை நிறத்திலான நுரை காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அவற்றைத் தொட்டால் அரிப்பு, வாந்தி ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதேசத்திற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று (03) வந்து நிலைமைகளை பரிசோதித்ததுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.