கண்டி நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இத் திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எசல பெரஹராவில் பாதுகாப்பிற்காக 5500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது

