காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
சுவாசக்கோளாறு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய நபரே இவ்வாறு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூச்சுத் திணறல் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி முதல் அவர் காலி சிறைச்சாலையில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இறந்தவரின் பிரேத பரிசோதனை காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.