முல்லைத்தீவிலிருந்து யாழிற்கு வானத்தினுள் சூட்சும்மாக மறைத்து கடத்தப்பட்ட தேக்க மரக் குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து நேற்றைய தினம் (18-08-2023) பிற்பகல் 2:30 மணியளவில் தேக்கம் குற்றிகள் மீட்க்கப்பட்டதாக சாவகச்சேரி தெரிவித்தனர்.
ஒல்லித் தேங்காய் குவியலுக்குள் மறைத்து கொண்டு சென்ற வேளையிலேயே மரக் குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தின் போது சாரதியும் கைது செய்யப்பட்ட நிலையில் 3 இலட்சம் பெறுமதியான 13 தேக்க மரக்குற்றிகளும் மீட்க்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவைச் சேர்ந்த 33வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

