சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி குறித்த நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் விற்கப்படும் அதிகபட்ச விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது கூறினார்.